மக்கள் நலன் கருதி முதலையை திருமணம் செய்துகொண்ட மெக்சிகோ நாட்டு மேயர்; உலகெங்கிலும் தீயாய் பரவும் செய்தி

அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி மெக்சிகோ வினோதங்கள்

தெற்கு மெக்சிகோவில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் தனது மக்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதற்காக பாரம்பரிய சடங்குகளுடன் ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
மெக்சிகோவின் டெஹுவான்டெபெக் இஸ்த்மஸில் உள்ள சோண்டல் பழங்குடி மக்களின் நகரமான சான் பெட்ரோ ஹுவாமெலுலாவின் மேயர் விக்டர் ஹ்யூகோ சோசா. இவர் அலிசியா அட்ரியானா என்ற முதலையை திருமணம் செய்துகொள்ள பழங்குடி பாராம்பரிய முறையில் சடங்குகள் நடைபெற்றன.
கெய்மன் வகையைச் சேர்ந்த இந்த முதல் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த சதுப்பு நிலத்தில் வாழ்கின்றன.
நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். காதல் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. இளவரசியை திருமணம் செய்துகொள்கிறேன்” என்று சோசா கூறினார். இரண்டு பழங்குடியினக் குழுக்கள் ஒரு திருமணத்துடன் சமாதானத்திற்கு வருவதைக் குறைக்கும் வகையில் 230 ஆண்டுகளாக இந்தச் சடங்குகள் அப்பகுதியில் நடந்து வருகின்றன.
ஒரு சோண்டல் மன்னர், ஹுவேவ் பழங்குடியினக் குழுவின் இளவரசியை மணந்தபோது இரண்டு பழங்குடி சமூகங்களுக்கும் இடையேயான விரோதம் முடிவுக்கு வந்தது என்று சொல்லப்படுகிறது. கடலோர ஓக்ஸாகா மாநிலத்தில் ஹுவே சமூக மக்கள் வாழ்கின்றனர்.
இந்தத் திருமணம் மழை பொழிவையும் அதிக விளைச்சலையும் கொடுக்கும் என்றும் சோண்டல் மக்களிடையே அமைதியும் நல்லிணக்கம் நிலவும் என்றும் வரலாற்றாசிரியர் ஜெய்ம் ஜராத்தே விளக்குகிறார்.
இநத் திருமண விழாவிற்கு முன், மணம் செய்துகொள்ளப்படும் பெண் முதலை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இதனால் மக்கள் அதை தங்கள் கைகளில் எடுத்து நடனமாடுவார்கள். முதலை பச்சை நிற பாவாடை, வண்ணமயமான எம்ப்ராய்டரி டூனிக் மற்றும் ரிப்பன்கள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க முதலையின் வாய் திருமணத்திற்கு முன்பே கட்டப்பட்டுவிட்டது. சடங்கின் ஒரு பகுதியாக, உள்ளூர் மீனவரான ஜோயல் வாஸ்குவேஸ், தனது வலையை வீசி எறிந்து, அதிக மீன்களைக் கொடுத்து, அதனால் அதிக செழிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.
திருமணத்திற்குப் பிறகு, மேயர் சோசா தனது மணமகளுடன் பாரம்பரிய இசைக்கு நடனமாடினார். நடனம் முடிந்ததும், மேயர் இளவரசி முதலைக்கு முத்தமிட்டார். “இரண்டு கலாச்சாரங்களின் ஒற்றுமையை நாங்கள் கொண்டாடுவதால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள்,” என்று சோசா தெரிவிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *