பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் டில்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பை வென்றது; பெங்களூரு நகரில் ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுரு அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பல ஆண்டுகளாக ஐபிஎல் ஆண்கள் அணி கோப்பையை வெல்லும் என்ற பெங்களூரு அணி ரசிகர்களின் கனவு பெண்கள் அணி மூலமாக நிறைவேறியுள்ளது. இதன் மூலம் பெங்களூரு அணி முதன்முறையாக வெற்றிக் கோப்பையை கொண்டாடுகிறது. ரசிகர்கள் பெங்களூரு நகர் முழுவதும் சாலைகளில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *