குவைத் நாட்டில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 40பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்

அரபு நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விபத்துகள்

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் உயிரிழந்ததை அடுத்து வெளியுறவு இணை அமைச்சர் அந்நாட்டுக்கு விரைகிறார். பிரதமர் மோடி உத்தரவின் பேரில் வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங் குவைத் விரைகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் மத்திய அரசு தொலைபேசியில் பேசி வருகிறது. குவைத் நாட்டில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் சிலர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தமிழர்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த பலர் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் இதுவரை 41 பேர் பலியானதாகவும், அதில் 2 தமிழர்கள் உள்பட 40 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவி தேவைப்படுவோர் +965-65505246 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *