ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் (357 சிக்சர்), ரோஹித் சர்மா (261), டிவில்லியர்ஸ் (251) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளர் விராட் கோலி.
ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
இந்த போட்டியில் விராட் கோலி 4 சிக்சர்களுடன் 83 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் 232 இன்னிங்ஸ்களில் 241 சிக்சர்கள் அடித்து தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார் விராட் கோலி. தோனி 218 இன்னிங்ஸ்களில் 219 சிக்சர்களை அடித்திருந்தார். அவரது ரிக்கார்டை விராட் கோலி நேற்று முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *