தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு; 950 பேட்பாளர்கள் களத்தில்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி கடந்த 27ம் தேதி வரை நடந்தது. இதில் 1749 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனை நடந்தது. அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 950 வேட்பாளர்களில் 874 ஆண்கள், 76 பெண்கள் போட்டியிடுகின்றனர். தென்சென்னை தொகுதியில் 41 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மத்திய சென்னை தொகுதியில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.வடசென்னை தொகுதியில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்; 32 ஆண்கள், 3 பெண்கள் போட்டியிடுகின்றனர். கரூர் மக்களவை தொகுதியில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மக்களவை தொகுதியில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஏற்றுக் கொள்ளப்பட்ட 1085 வேட்பு மனுக்களில் இருந்து 135 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *