இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு கல்வித் துறையில் இன்று பல புதியத் திட்டங்களை தொடங்கி வைத்தது. அதில் மிக முக்கியமானத் திட்டம் பெண்களுக்கு அவர்களின் மேல்படிப்பிற்கு உதவித் தொகை வழங்கும் திட்டம். அதாவது பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்தால் அவர்களுக்கு கல்லூரிப் படிப்பினைத் தொடங்கும்போது மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று நடந்த அரசு விழாவில் இந்திட்டம் தொடங்கப்பட்டது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அவர் பேசுகையில் இத்திட்டம் இந்தியாவில் அனைவருக்குமான முன்னோடித் திட்டமென புகழ்ந்து பேசினார்.
புதுமைப் பெண்கள் திட்டத்தோடு மற்றொரு மிக முக்கியமான திட்டத்தையும் தமிழக அரசு தொடங்கி வைத்தது. டில்லியில் உள்ளதுபோல தமிழகத்திலும் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கும் திட்டம்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும் என்றும், தனியார் பள்ளிகளில் மட்டும் ஸ்மார்ட் வகுப்பறைகள் இருக்கிறது, தற்போது அரசு பள்ளிகளிலும் அதுபோன்று ஸ்மார்ட் வகுப்பறைகள் வந்துவிட்டது. கல்வி அனைவருக்குமானது. அது எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதே தங்களது நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
