தமிழ்நாட்டில் 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அறிவியல் தேர்வு 22 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
குறிப்பிட்ட தேதிகளில் தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாக பள்ளி கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய அட்டவணைப்படி, ஏப்., 13 முதல் கோடை விடுமுறை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்வு அட்டவணை மாற்றத்தால், கோடை விடுமுறை, ஏப்., 13-க்கு பதிலாக ஏப்., 24ம் தேதியில் துவங்க உள்ளது.

