தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிக்கும் படம் ‘தேவரா’ ஆகும். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரட்டாலா சிவா இயக்கியுள்ள இந்த படம் செப்டம்பர் 27-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்திய படமாக வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், கலையரசன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது , மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், மேடையில் பேசியது viral agi கொண்டு இருக்கிறது.அதில் அவர் கூறியதாவது: “சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நான் அம்மாவுடன் இருந்த நிறைய நினைவுகள் சென்னையில் தான் இருக்கிறது” என்றார்.என் அம்மாவிற்கு நீங்கள் அளித்த ஆதரவால் தான் என் குடும்பம் இவ்வாறு இருக்கிறோம். அதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் எனக்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். அதற்காக நான் கடுமையாக உழைப்பேன் என்று அழகான தமிழில் கூறியுள்ளார். இவரின் தெளிவான தமிழ் பேசுவதைக் கண்டு பலர் வியப்புடன் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

