ஜார்க்கண்ட் மாநிலத்தில் திரிகூட் மலைப்பகுதியில் இயற்கை அழகை ரசிக்கும் வண்ணம் தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ரோப் கார் இயங்கி வருகிறது. இதை சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற 12 ரோப் கார்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்று ஒன்றுடன் ஒன்று மோதியது. இதில் நிலைகுலைந்த 3 பேர் மேலிருந்து கீழ் விழுந்து பரிதாபகரமாக பலியாயினர். மாட்டியிருந்த மற்றவர்களை மீட்டுக் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நஷ்ட ஈடு தரப்படும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.