நியூயார்க் நகரில் டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரம் செய்யவிருந்த இடத்தின் அருகில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி பரவியதால் பரபரப்பு

அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்திற்கு அருகில் இருந்த காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவலால் பரபரப்பு.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்பும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த பரப்புரையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது இருமுறை துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நியூயார்க்கில் யூனியண்டாலே என்ற இடத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், அங்கிருந்த வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அமெரிக்க போலீஸ் விசாரணையில் அது பொய்யான தகவல் என்றும் டொனால்ட் டிரம்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என உறுதி செய்துள்ளது. ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் அவர் மீது நடந்த அந்த கொலை முயற்சிக்கு கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோரது பேச்சுக்களே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *