அமெரிக்காவில் நடைபெற்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் அமெரிக்க இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள்

அமெரிக்காவில் நடந்த பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஒன்பது இந்திய அமெரிக்கர்களில் ஆறு பேர் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபையில் தங்கள் பதவிகளை வெற்றிகரமாகப் பெற்றுள்ளனர்.

சுஹாஸ் சுப்ரமணியன்:இந்திய வம்சாவளியான சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். குடியரசுக் கட்சியின் மைக் கிளான்சியை வென்றுள்ளார்; அவர் முன்பு ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் வெள்ளை மாளிகையின் ஆலோசகராக பணியாற்றியவர்.

ஸ்ரீ தானேடர் : காங்கிரஸின் ஸ்ரீ தானேடர் மிச்சிகனின் 13வது மாவட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார், அவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மார்டெல் பிவிங்ஸை விட 35 சதவீத புள்ளிகளுக்கு மேல் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.

பிரமிளா ஜெயபால் : வாஷிங்டனில் குடியரசு கட்சி வேட்பாளரை விட 65 சதவீத ஓட்டுகள் அதிகம் பெற்று 5வது முறையாக தேர்வாகியுள்ளார். அவர் ஏற்கனவே வாஷிங்டனில் இருந்து செனட் சபைக்கு தேர்வாகி, தெற்காசியாவை சேர்ந்த முதல் பெண் என்ற பெருமை பெற்றுள்ளார்.

ரோ கன்னா: கலிபோர்னியாவின் 17வது காங்கிரஸ் மாவட்டத்தில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு ரோ கன்னா இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார்.

அமி பெரா: கலிபோர்னியாவில் அமி பெரா வெற்றி பெற்றுள்ளார்.2013 ம் ஆண்டு முதல் அதே கலிபோர்னியா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி: இலினாய்சில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியை பெற்றுள்ளார். இதன்மூலம் 5வது முறையாக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *