சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் வழக்கம் போல் இயங்கியது. புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி, நோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக வழக்கம் போல் பணியாற்றி வந்தார். சிகிச்சைக்காக வந்த சிலர், மருத்துவர் பாலாஜியுடன் தகராறில் ஈடுபட்டு, பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி தாக்கினர். தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். மருத்துவரை உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் மயக்க நிலையில் உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன. மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் எனவும் மருத்துவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், என்கிற தகவலை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அyமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திப்பில் விவரங்களை தெரிவித்தார்.அப்போது அவர் தெரிவித்தது: “சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நான்கு பேர் வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் பாலாஜி மீது விக்னேஷ் என்பவர் கத்தியால் தாக்குதல் நடத்தி தப்பி ஓடிய நிலையில்.”நான்கு பேரில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர், மீதமுள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர் என கூறினார்.


