லீ மஸ்க் மெய்நிகர் (விர்சுவல் ரியாலிட்) படத்தை இயக்கியதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை ஐஐடி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC எனும் ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த லீ மஸ்க் திரைப்படத்திற்கான மெய் நிகர் தொழில்நுட்பம் விருதை இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் பெற்றார். சர்வதேச அளவில் ஏஆர் ரஹ்மான் பல விருதுகளை பெற்றிருந்தாலும் கல்வி நிறுவனம் சார்பில் தரப்படும் விருது என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
சென்னை ஐஐடி பேராசிரியர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு
இந்த வருடத்திற்கான சென்னை ஐஐடியின் அனுபவமிக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்பு
மையத்தின் விருதை வழங்கினர். அதன்பின்னர் 5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில்
ஆறு வருடமாக, பலவிதமான தொழில்நுட்ப சிக்கலுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட லீ
மஸ்க் மெய் நிகர் தொழில்நுட்ப திரைப்படம் குறித்து ஏஆர் ரஹ்மான் உரையாடினார்.

