ஒரே ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை விதித்த சவுதி அரேபியா

அரபு நாடுகள் உலகம் சிறப்பு செய்திகள் நீதி மன்றம் முதன்மை செய்தி

சவுதி அரேபியாவில் 2024 ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் சர்வதேச நாடுகளிடையே கவலையை உருவாக்கியுள்ளன.சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் ஒருவருக்கு நஜ்ரானின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின், 2024 ஆம் ஆண்டில் இதுவரை 101 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 மற்றும் 2023 ஆண்டுகளை ஒப்பிடும் போது, சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றும் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு சராசரியாக 34 வெளிநாட்டவர்கள் இந்த தண்டனையை எதிர்கொள்கின்றனர். 2023 ஆம் ஆண்டில், சீனா மற்றும் ஈரானுக்கு பிறகு, சவுதி அரேபியா அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றிய நாடாகக் கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், இதுவரை 274 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டவர்களில், பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமனிலிருந்து 20 பேர், சிரியாவிலிருந்து 14 பேர், நைஜீரியாவிலிருந்து 10 பேர், எகிப்திலிருந்து 9 பேர், ஜோர்டானிலிருந்து 8 பேர் மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 7 பேர் உள்ளனர். மேலும் சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மூன்று பேர், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து ஒரு ஒருவர் என மொத்தம் ஆறு பேர் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆண்டு போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனைகள் அதிகரித்துள்ளன என கூறபடுகிறது. சவுதியில் நடைபெறும் மரண தண்டனைகள் உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளன. குறிப்பாக, கொலை மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *