கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: தடைகளை மீறி பேரணி.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கான நிகழ்வுகள் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்று வருகின்றன. பிரேமலதா தலைமையில், தே.மு.தி.க. கட்சியின் உறுப்பினர்கள் அமைதி பேரணியை நடத்துகிறார்கள். போலீசார்களின் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், அவர்கள் தடைகளை மீறி பேரணியை முன்னெடுத்துள்ளனர். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி பேரணி நடைபெறும் என பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்பே அறிவித்திருந்தார். சென்னை கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகத்திலிருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல தே.மு.தி.க திட்டமிட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக தொண்டர்கள் குவிந்த நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், தே.மு.தி.கவின் அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், காவல்துறையினரின் தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணியை நடத்தி வருகின்றனர். அமைதி பேரணிக்கு அனுமதி கோரி மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாருடன் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அமைதி பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடையையும் மீறி தேமுதிகவினர் அமைதி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *