ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளைத் தடுக்க காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பயன்படுத்த ஏற்பாடு.

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆரோக்கியம் இந்தியா இயற்க்கை சமூக வலைதளங்கழ் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள்

மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பொருத்த வேண்டும் என ஆட்சியர் மா.செள.சங்கீதா தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் ஏறு தழுவுதல் அரங்கம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகளைப் பற்றிய ஆய்வுக்கூட்டம் இன்று (டிச.27) ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார், மேலும் மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட எஸ்.பி அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னணி வகித்தனர். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், கிராம விழா குழுவினர் மற்றும் மாடுபிடி வீரர்கள் மற்றும் வளர்ப்பவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆட்சியர் மா.செள.சங்கீதா கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றும்போது, “தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். காளைகளை கட்டுப்படுத்தும் போது, கொம்புகள் குத்தி உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவசங்களை அணிவிக்க வேண்டும். கடந்த ஆண்டில் இதனை கடைபிடிக்கவில்லை, ஆனால் இந்த ஆண்டில் இதனை உறுதியாக செயல்படுத்த வேண்டும். இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *