தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
அதிமுக ஆட்சியில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், நடைபெற்ற வார்டு மறு சீரமைப்புப் பணி காரணமாக, அவை தவிர்த்து மற்ற இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
2019 டிசம்பரில் தேர்வு செய்யப்பட்ட பிரிதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதால், சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள போதும், இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாலும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான பதவிக்காலம் முடிவடையாததாலும், தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

