ஹாவேர்ட் பல்கலைகழகம் டிரம்ப் உத்தரவுகளை பின்பற்ற மறுத்ததால், 2.2 பில்லியன் டாலர் நிதி நிறுத்தப்பட்டது. முன்னாள் அதிபர் ஒபாமா இதனை வரவேற்றார்.
அமெரிக்காவில் அனைத்து துறைகளை ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கும் அதிபர் டிரம்ப் அடுத்து கையில் எடுத்திருப்பது பல்கலைகழகங்களை. தனது நிர்வாக உத்தரவுக்கு கட்டுப்படவில்லை என கூறி ஹாவர்ட் பல்கலைகழகத்திற்கு 2 புள்ளி 2 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்துள்ளார்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ளது ஹாவேர்ட் பல்கலைகழகம். 1636- ஆம் தொடங்கப்பட்ட இந்த பல்கலைகழகம், அதன் கல்வி முறைக்கும், சிறப்பான ஆராய்ச்சிகளுக்கும் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. அமெரிக்காவின் private Ivy League என அழைக்கப்படும் மிகச் சிறந்த 8 தனியார் பல்கலைகழங்களில் முக்கியமானது.
இந்த பல்கலைகழகத்திற்கு வழங்கப்படும் மத்திய நிதியான 2 புள்ளி 2 பில்லியன் டாலர்களையும், 60 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்துள்ளார் அதிபர் டிரம்ப். இதற்கு டிரம்ப் கூறும் காரணம். ஹாவர்ட் பல்கலைகழகம் தனது நிர்வாக உத்தரவை பின்பற்றவில்லை என்பதே. டிரம்ப் அரசு கடந்த வெள்ளிக்கிழமை ஹாவர்ட் பல்கலைகழகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில் பல்கலைகழக தலைமையில் மாற்றம் செய்ய வேண்டும், மாணவர் சேர்க்கை முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும், சில மாணவர் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முக்கிய பல்கலைகழகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கொலம்பியா பல்கலைகழகத்திற்கு 400 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்தார், இதேபோல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு 210 மில்லியன் டாலர் நிதியும், கார்னெல் பல்கலைக்கழகத்திற்கு 1 பில்லியன் டாலர் நிதியும், North west பல்கலைக்கழகத்திற்கு சுமார் $790 மில்லியன் நிதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் பல்வேறு காரணங்களை காட்டி அமெரிக்க பல்கலைகழகத்திற்கு டிரம்ப் நிர்வாகம் 12 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்துள்ளது.

