ஜப்பான் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியில் இந்தியா 24 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் விளையாட்டு ஜப்பான்

டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியில் இந்தியா 24 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த போட்டிகள் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்றன, மற்றும் நேற்று முடிவடைந்த இப்போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 24 பதக்கங்களை வென்றனர். இதில் 6 தங்கம், 9 வெள்ளி, மற்றும் 9 வெண்கலப் பதக்கங்கள் அடங்குகின்றன. இந்திய வீரர் சிவராஜன் சோலைமலை ஒற்றையர் எச்எச்6 கிளாஸ் பிரிவில் தங்கம் வென்றார், மேலும் இரட்டையர் பிரிவில் சிவராஜன் மற்றும் சுதர்சன் சரவணக்குமார் முத்துசாமி இணைந்து தங்கம் பெற்றனர். சுகந்த் கடம், ஆடவர் ஒற்றையர் (எஸ்எல்4) பிரிவில் தங்கம் பெற்றார், மேலும் இரட்டையர் பிரிவில் (எஸ்எல்3-எஸ்எல்4) தினேஷ் ராஜையா ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் நவீன் சிவக்குமார் மற்றும் சூர்யகாந்த் யாதவ் வெண்கலத்தை பெற்றனர். ஆடவர் ஒற்றையர் எஸ்எல்3 பிரிவில், நடப்புச் சாம்பியனான குமார் நிதேஷ், ஜப்பானின் டாய்சுகே புஜிஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார். மகளிர் பிரிவில் (எஸ்யு5) மணீஷா ராம்தாஸ் தங்கம் மற்றும் நீரஜ் (எஸ்எல்3 பிரிவு) வெள்ளி பதக்கம் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *