நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு நீட் பொதுத் தேர்வு அவசியமாகும். இந்த தேர்வை மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை, எனப்படும் என்.டி.ஏ., ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 550 நகரங்களில், 5,000க்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. மே 4ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். இந்நிலையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வின் ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். நீட் தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 011-4075 9000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். தேர்வுக்கான மையம் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

