ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்; இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் நாட்டை தாக்கிய அமெரிக்க ஏவுகனைகள்

அமெரிக்கா அரசியல் அரபு நாடுகள் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் போர் மற்றவை முதன்மை செய்தி

ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். இந்த தாக்குதலுக்காக அமெரிக்கா பேரழிவை சந்திக்கும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் மத்திய கிழக்கில் மட்டுமின்றி உலகளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அணுசக்தி மையத்தை தாக்கக் கூடிய ஜிபியு-57 ரக பங்க்கர் பஸ்டர் வெடிகுண்டு உலகிலேயே அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. இதனால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இப்போரில் பங்கேற்பது குறித்து 2 வாரத்தில் முடிவு செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 19ம் தேதி கூறியிருந்தார். அதே சமயம், அடுத்த 2 நாளில் அமெரிக்கா களமிறங்கும் என இஸ்ரேல் அதிகாரிகள் கூறியிருந்தனர்.அதே போல, போரின் 10வது நாளான நேற்று அமெரிக்காவும் இணைந்தது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் நடவடிக்கை மூலம் ஈரானில் குண்டுமழை பொழிந்தது. நேற்று அதிகாலை அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த பி2 ஸ்டெல்த் போர் விமானங்கள் 18 மணி நேரம் பயணித்து ஈரான் வான்பரப்பை அடைந்தன. எந்த ரேடாரிலும் எளிதில் சிக்காத இந்த விமானங்கள் ஈரானின் நடான்ஸ், போர்டோ, இஸ்பஹான் அணு மையங்களை குறிவைத்து குண்டு மழை பொழிந்தன. குறிப்பாக, 6 பி2 விமானங்கள், மலைக்கு கீழே 60 மீ குடைந்து சென்று வெடித்து சிதறக் கூடிய 13,600 எடை கொண்ட ஜிபியு-57 குண்டுகளை போர்டோ அணுசக்தி மையத்தின் மீது வீசின. எந்த நாட்டிடமும் இல்லாத இந்த வகை குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியது இதுவே முதல் முறை. மற்றொரு பி2 விமானம் நடான்ஸ் அணுசக்தி மையத்தை தாக்கின. அதே சமயம், அமெரிக்க கடற்படை நீர்மூழ்கி கப்பல்கள் 30 தோமாஹாக் ஏவுகணைகளை வீசி நடான்ஸ், இஸ்பஹான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானின் நடான்ஸ், போர்டோ, இஸ்பஹான் ஆகிய 3 அணு சக்தி மையங்கள் மீதான தாக்குதலையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். தாக்குதலில் ஈடுபட்ட எங்களின் அனைத்து போர் விமானங்களும் ஈரான் வான் பரப்பில் இருந்து வெளியேறி விட்டன என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *