நடப்பு ஆண்டில் ஓடிடி தலங்களில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ் எது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்ப்பது என்பது அதிகரித்து வந்த சூழலில் தற்போது ஓடிடி தளங்களில் படங்கள் மற்றும் வெப் சீரிஸை பார்க்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.
எந்த நேரத்திலும் படங்கள் மற்றும் இணைய தொடர்களை ஓடிடியில் பார்த்து மகிழலாம் என்பதாலும், திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் சில வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் என்பதாலும் ஓ.டி.டி. தளத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக ஓடிடி தளங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் சில இணைய தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளன. பாபி தியோல் முன்னணி கேரக்டரில் நடித்த ஆஷ்ரம், ஜித்தேந்திர குமாரின் பஞ்சாயத் மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்று வரும் ஸ்குவிட் கேம் 3 ஆகியவை இந்தியாவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
இருப்பினும் இந்திய ஓடிடி தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட இணைய தொடராக பங்கஜ் திரிபாதி நடித்துள்ள கிரிமினல் ஜஸ்டிஸ் ஃபேமிலி மேட்டர் என்ற இணைய தொடர் 27 மில்லியன் வியூஸ்களை கடந்து பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த தொடரில் வழக்கறிஞர் கேரக்டரில் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். அவருடன் முகமது சீசன் அய்யூப், சுர்வீன் சாவ்லா, குஷ்பூ ஆத்ரே உள்ளிட்ட இடம்பெற்றுள்ளார்கள். ஏற்கனவே கிரிமினல் ஜஸ்டிஸ் என்ற பெயரில் 3 இணைய தொடர்கள் முன்பு வெளிவந்துள்ளன. இந்த தொடரில் நான்காவது சீசன் கடந்த மே மாதம் 29ஆம் தேதி வெளியானது.
ரிலீஸ் செய்யப்பட்ட சில வாரங்களிலேயே அதிக வியூஸ்களை இந்த இணைய தொடர் குவித்து வருகிறது. இதேபோன்று பஞ்சாயத், ஆஷ்ரம், பாதால் லோக் உள்ளிட்ட இணைய தொடர்களும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.

