பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்.

ஆரோக்கியம் சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் பன்முகக் கலைஞர் மதன் பாப் காலமானார். அவருடைய வயது 71 ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக, அவரது முகபாவனைகள் மற்றும் தனித்துவமான சிரிப்பு மிகவும் பிரபலமாக உள்ளன. சமீபத்தில், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றார். இன்று (ஆக.2) மாலை, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார்.மதன் பாபு என்ற பெயரை ‘வானமே எல்லை’ படத்தில் மதன் பாப் என்று மாற்றினார் இயக்குநர் கே.பாலசந்தர். இவரது இயற்பெயர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி. முதலில் இசையமைப்பாளராகவே தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்பு நடிகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர் என பன்முக திறமைகளை வளர்த்துக் கொண்டார். தமிழில் 150-க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார். இவரது தனித்துவமான சிரிப்பு மிகவும் பிரபலமானது. நீங்கள் கேட்டவை, வானமே எல்லை, தேவர் மகன், ஜாதி மல்லி, உழைப்பாளி, திருடா திருடா, மகளிர் மட்டும், சதிலீலாவதி, பூவே உனக்காக, தெனாலி, ஃபிரெண்ட்ஸ், பம்மல் கே சம்பந்தம், கிரி, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் இவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் மகிழ்ச்சியுடன் பார்க்கப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதன் பாப் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *