இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை ஜூலை 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவிட்டது.
காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்திய வான்வௌியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க கடந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி முதல் விதிக்கப்பட்ட தடை, கடந்த மே 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தானும் கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வௌியை பயன்படுத்த தடை விதித்தது.
அதன்படி, இந்திய விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை ஜூலை 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவிட்டது.

