சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

அமெரிக்கா அரசியல் உலகம் சீனா பொருளாதாரம்

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. சீனாவை விட்டுவிட்டு இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. சீனா மீது டிரம்ப் வரியை அதிகரிக்காதது குறித்து அமெரிக்காவிலும் பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பினர். மேலும் சீனா மீது விதிக்கப்பட்ட பதிலடி வரியையும் அமெரிக்கா 90 நாட்கள் வரை ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது. இந்த வரி நிறுத்தத்திற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது. இந்த நிலையில், சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நவம்பர் 10ம் தேதி வரை கூடுதல் வரி விதிப்பை நிறுத்தி வைக்கும் உத்தாவில் கையெழுத்திட்டார் டொனால்டு டிரம்ப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *