சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) 5% மற்றும் 18% என 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 12%, 28% ஜிஎஸ்டி வரிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த,புதிய ஜிஎஸ்டி வரி முறை செப் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரிகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்தார். இதனையடுத்து, ஜிஎஸ்டி விகித சீரமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை, ஜிஎஸ்டி கவுன்சிலால் நிர்மாணிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிற்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.
GST rate cuts announced by FM Sitharaman, 5% and 18% to be two main slabs; new rates effective September 22

