பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்திய சீனா; நிகழ்ச்சியில் பங்குகொண்ட ரஷ்யா மற்றும் வட கொரிய அதிபர்கள்

அமெரிக்கா அரசியல் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சீனா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி ரஷ்யா வட அமெரிக்கா

சீனாவில் நடைபெற உள்ள பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பெய்ஜிங் சென்றடைந்தார்.
2ஆம் உலக போரில் ஜப்பான் தங்களிடம் சரணடைந்ததை கொண்டாடும் வகையில் சீனாவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறுகிறது.. இதில் 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது. இதற்காக வட கொரியாவில் இருந்து சீனாவுக்கு கிம் ஜாங் உன் ரயிலில் சென்றார்.
பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன்-க்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி வரவேற்பு அளித்தார். இந்த பேரணியின் போது சீன அதிபர் ஜீ ஜிங் பிங், ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்திக்க உள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. 2011ம் ஆண்டு வடகொரியாவின் அதிபரான பிறகு சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கை கிம் ஜாங் உன் 5 முறை சந்தித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினை கிம் ஜாங் உன் 3 முறை சந்தித்துள்ளார்.
உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகபடியான வரியை விதித்து வரும் நிலையில், அது குறித்து 3 நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *