திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார். காலை விமான நிலையத்தில் இருந்து பிரசார வாகனத்தில் புறப்பட்ட விஜய் சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு காந்தி மார்க்கெட் மரக்கடை வந்தடைந்தார். அப்பகுதியில் தவெக தொண்டர்கள் கடலென திரண்டு இருந்ததால் மரக்கடை செல்வதற்கு கால தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், மரக்கடை அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு வாகனத்தின் மேல் நின்றபடி விஜய் தொண்டர்கள் மத்தியில் பேச தொடங்கினார். அப்போது மைக் சரியாக வேலை செய்யாததால் விஜய் என்ன பேசினார் என்றே தெரியவில்லை என அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர். தொழில்நுட்ப சிக்கலால் சில நேரங்களில் பரப்புரையை முடித்தார். விஜயின் பரப்புரையை கேட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். முதல் பரப்புரையிலேயே மைக் சிக்கலால் த.வெ.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

