இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கனடாவிற்கு வந்தால், அவரை நிச்சயமாக கைது செய்வேன் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்த வாரண்ட் உத்தரவை கனடா கடைப்பிடிக்கும் என்றும், அதனை மதிக்காமல் எந்த வித விதிவிலக்குகளும் செய்யப்படாது என்றும் அவர் கூறினார்.மேலும், தனி பாலஸ்தீன நாடு உருவாகுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நெதன்யாகு தடுக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் மார்க் கார்னி முன்வைத்துள்ளார்.அவர் மேலும், “சர்வதேச சட்டங்கள் அனைவருக்கும் சமம்; எந்த நாட்டுத் தலைவர் என்றாலும் குற்றச்சாட்டுகள் இருந்தால் நீதிமுறைக்கு வரவேண்டும்” எனவும் தெரிவித்தார்.

