அமெரிக்கா அரசு நிதி முடக்கம் – அரசு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு

அமெரிக்கா அரசியல் இந்திய வணிகம் உலகம் செய்திகள் பொருளாதாரம்

அமெரிக்க அரசின் நிதி முடக்கம் 35 நாட்களை கடந்துள்ளது. இதனால் பல அரசு ஊழியர்கள் ஊதியம் இன்றி கட்டாய விடுப்பில் உள்ளனர். சில முக்கிய துறைகளில் ஆள் பற்றாக்குறை காரணமாக சேவைகள் முடங்கியுள்ளன.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்றதிலிருந்து பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் — குறிப்பாக குடியேற்றச் சட்டம், வரி விதிப்பு, மற்றும் ‘H1B’ விசா தொடர்பான கட்டுப்பாடுகளில்.அரசு நிதி விடுவிப்புக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காததால், அரசு துறைகளுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால், முக்கிய துறைகள் செயல்பட முடியாமல் திணறுகின்றன. அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் சிலர் ஊதியமின்றி வேலை செய்கிறார்கள்.இது 2018-2019ல் டிரம்ப் ஆட்சியின்போதும் நடந்தது. இப்போது மீண்டும் அதே நிலை உருவாகியுள்ளது. நிதி முடக்கத்தால் 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் விடுப்பில் உள்ளனர்; மேலும் 7.30 லட்சம் ஊழியர்கள் சம்பளம் இன்றி பணிபுரிகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *