இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு பிரான்ஸ் அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை வழங்கவுள்ளது. இந்த தொழில்நுட்பம், இந்திய கடற்படையின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கின்றது, குறிப்பாக திட்டம் 66 மற்றும் திட்டம் 77 என அழைக்கப்படும் அடுத்த தலைமுறை டீசல்-மின்சார தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் , இந்திய கடற்படையின் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னேற்றுகின்றன. கடற்படை, ‘திட்டம் 66’ என்ற தலைப்பில் 66 போர்க் கப்பல்களை உருவாக்குவதற்கான திட்டத்தை முன்னெடுத்துள்ளது, மேலும் ‘திட்டம் 77’ என்ற பெயரில் அணுசக்தி மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. பாரம்பரிய ப்ரொப்பல்லர் அமைப்புகளுக்கு மாற்றாக, பம்ப்செட் உந்துவிசை தொழில்நுட்பம் ஒரு புதிய முன்னேற்றமாக உள்ளது. இந்த தொழில்நுட்பம், பிரெஞ்சு பாராகுடா வகை நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒலியை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கிறது. இதன் மூலம், கப்பலின் அமைதியான செயல்பாடு மற்றும் எதிரிகளின் கவனத்தை ஈர்க்காமல் செயல்படுவதற்கான திறன் அதிகரிக்கப்படுகிறது. இந்த மாற்றம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் நீர்மூழ்கிகளை மிகவும் சப்தமற்றதாக மாற்றும். இதனால், எதிரிகள் நமது இருப்பிடத்தை கண்டறிய முடியாது. இந்த அதிநவீன தொழில்நுட்பம் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மேம்பட்ட சூழ்ச்சித்திறனை வழங்குவதோடு, நீருக்கடியிலான போர் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது இந்திய கப்பற்படையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும். இதன் மூலம், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு வலிமைமிக்க சக்தியாக மாறும். இந்தியாவிற்கு இந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பிரான்ஸ் விருப்பம், அதனால் இரு நாடுகளுக்கிடையிலான வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகளை பிரதிபலிக்கிறது. மேலும், வான், கடல் மற்றும் தரைவழி கூட்டு ராணுவ பயிற்சிகளை இரு நாடுகளின் ராணுவங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றன.