கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் காலமானார். அவரது உடல், பொதுமக்களின் பார்வைக்காக புனித பீட்டர்ஸ் சர்ச்சியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று வாட்டிகன் சிட்டிக்கு சென்றார். அங்கு போப் பிரான்சிஸின் உடலுக்கு அவர் அஞ்சலியளித்தார். அவருடன் பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியன் ஆகியோர் சென்றுள்ளனர்.

