தைய்வான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவு

இயற்கை பேரிடர் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தைவானின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், கடைகள் குலுங்கின.
தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள், கடைகள் குலுங்கின. கடைகள் மற்றும் வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் குலுங்கி, தரையில் விழுந்து சிதறிக் கிடந்தன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
பசிபிக் பெருங்கடலின் பெரும்பாலான பகுதிகளைச் சுற்றியுள்ள ‘ ரிங் ஆப் பயர்’ என, அழைக்கப்படும் புவித்தட்டுப் பகுதியில் தைவான் அமைந்துள்ளது. இதனால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *