சோழர்களின் வரலாற்றை துல்லியமாக பதிவு செய்ததாக கூறப்படும் திருவிந்தளூர் செப்பேடு UNESCO அங்கீகாரத்தை இழந்துள்ளது. இந்த திருவிந்தளூர் செப்பேடு சோழர் கால ஆட்சிமுறை, நில அளவைகள், கோவில் நிர்வாகம் போன்ற விவரங்களை பதிவு செய்துள்ளதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த செப்பேட்டை சர்வதேச அளவில் அங்கீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், UNESCO உலக பாரம்பரிய அங்கீகாரம் வழங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.UNESCO விதிமுறைகளின்படி, ஒரு வரலாற்று பொருள் அல்லது சின்னம் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமெனில்,செப்பேட்டின் ஆவண சான்றுகள் முழுமையாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்,அதன் உண்மைத் தன்மை குறித்து கூடுதல் விஞ்ஞான ஆய்வு தேவை,மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பான திட்டங்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.இதையடுத்து தொல்லியல் துறை மற்றும் மாநில அரசு இணைந்து செப்பேட்டின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேவையான ஆவணங்கள் திரட்டி மீண்டும் பரிந்துரை செய்யவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

