தமிழ்நாட்டை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என்பதை கண்டறிய ஒன்றிய அரசு ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட வங்கக் கடல் பகுதிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் மட்டும் சுமார் 30,000 லைன் கிலோ மீட்டர் பரப்பளவில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வங்கம், பூர்ணியா மற்றும் மகாநதி கடற்பகுதிகளிலும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் வளம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை அறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு டெண்டர் கோரியுள்ளது.

