இந்தியாவில் விவசாய வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்ட பல்வேறு திட்டங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐநாவின் உயரிய கௌரவமான ‘அக்ரிகோலா’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.விவசாய உற்பத்தியை அதிகரித்தல், நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் கொண்டு வருதல், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு உதவித் திட்டங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை விவசாயம், நீர் சேமிப்பு, உரம் மற்றும் விதை உதவித் திட்டங்கள் போன்ற பல முயற்சிகளும் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த விருது இந்திய விவசாய துறைக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலக நாடுகளில் உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்காக செயல்படும் முக்கிய அமைப்பாகும். அந்த அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட ‘அக்ரிகோலா’ பதக்கம், உலகளவில் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

