நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைந்து வெளிவந்த “ஜெயிலர்” திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் வசூலில் பல கோடிகளை ஈட்டியுள்ளதுடன், அதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், “ஜெயிலர் 2” படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஜெயிலர் 2 படத்திற்கான புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததை தொடர்ந்து, ரசிகர்களில் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகம் உருவாகியுள்ளது. முதற்கட்டமாக 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், படத்தின் அறிவிப்பு வீடியோ சில மாதம் முன்பு வெளியிடப்பட்டது, அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
