3,000 கி.மீ. தூரத்தில் இருந்து இந்திய மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து சாதனை.

இந்தியா உலகம் சிறப்பு சீனா செய்திகள் மருத்துவம் முதன்மை செய்தி

ஹைதராபாத்தை சேர்ந்த சிறுநீரக நிபுணர் மருத்துவர் சையது முகமது கவுஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்துவமனையில் ரோபோ அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு பயிற்சி பெற்றவர். இந்நிலையில் அவர் சீனாவில் இருந்தபடியே ஹைதராபாத்தில் உள்ள ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்தார்.சுமார் 3,000 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை 90 நிமிடங்கள் நீடித்தது. ஹைதராபாத் மருத்துவமனையில் நோயாளிக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு, ரோபோ கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.அதே நேரத்தில் வூஹானில் இருந்த மருத்துவர், ரிமோட் கன்ட்ரோல் மூலம் அந்த ரோபோ கருவிகளை இயக்கி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். 5ஜி தொழில்நுட்பம், 3டி கேமராக்கள் மற்றும் செயற்கைக்கோள் இணைப்பு ஆகியவற்றின் உதவியுடன் இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *