தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருது ஷாருக் கான், நயன்தாரா மற்றும் அனிருத் 2024 ஆண்டுக்கான விருதுகளை வென்றுள்ளனர்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் தனியார் அமைப்பு சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023 ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டன, இதில் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் விழாவில் கலந்து கொண்டனர்.
மும்பையில் நடந்த இந்த பிரமாண்ட விருது விழாவில், அட்லி இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் மூன்று விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கானுக்கு, சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாராவும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை அனிருத்தும் தட்டி சென்றனர். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது ஒரு சுவாரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது, அந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *