தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மே 26- ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், வழக்கின் தற்போதைய நிலை மற்றும் அரசு மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் தட்சிணாமூர்த்தி, சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

