இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு.

அரசியல் ஆளுமை/விருது இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றார். முன்னாள் தலைமை தளபதியான ஜெனரல் அனில் சவுகான் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் உயரிய ராணுவ பொறுப்பை ராஜா சுப்பிரமணி ஏற்றுக்கொண்டார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி, இந்திய ராணுவத்தில் நீண்டகால அனுபவம் கொண்ட அதிகாரியாக அறியப்படுகிறார். 1985-ஆம் ஆண்டு கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் தனது ராணுவப் பணியைத் தொடங்கிய அவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் செயல்படும் ராணுவத்தின் முக்கிய தாக்குதல் பிரிவை வழிநடத்திய அனுபவமும் அவருக்கு உள்ளது.எல்லைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பணிகளில் சிறந்த சேவையாற்றியுள்ள ராஜா சுப்பிரமணி, தற்போது இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.பதவியேற்ற பிறகு பேசிய அவர், “இந்திய ஆயுதப்படைகளில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்களின் மேம்பாடு, பயன்பாடு மற்றும் ஒருங்கிணைப்பை மேலும் விரைவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.இந்திய ராணுவத்தின் உயரிய பொறுப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களிடையே பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *