தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில் சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் சுற்றிக்கை மூலம் தெரிவித்துள்ளர்.
அதில் இரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும். அதற்கு போலீஸ் உதவி கமிஷனர், ஆர்டிஓ, துணை ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
ஒலிபெருக்கி, பேனர்கள் மற்றும் கொடிகள் வைக்கவும் போலீஸ் ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
இதர மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
விநாயகர் ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும். விநாயகர் சிலைகளை மினி லாரி மற்றும் டிராக்டர் வாயிலாக மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் மாட்டு வண்டி வாயிலாகவோ அல்லது மூன்று சக்கர வாகனங்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனவும் அந்த சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.