விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தி உத்தரவு வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு கோவையில் இன்று விசைத்தறியாளர்கள் பாராட்டுவிழா நடத்தினார்கள்.
1,62,788 விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட்டாகவும், 74,559 கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட்டாகவும் இலவச மின்சாரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாலையில் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடைபெறும் பிரமாண்டமான பாராட்டு விழாவில் கலந்துகொண்டார். இதில் 2700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டம் முழுவதும் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.