தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது84.1941 ஆம் ஆண்டு தேனியில் பிறந்த பாரதிராஜா, ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் கிராமிய கதைகளை புதிய பரிமாணத்தில் மக்களிடையே கொண்டு சேர்த்தார். இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகர் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.நடிகைகள் ராதா, ராதிகா, ரேவதி உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளை அறிமுகப்படுத்திய அவர், மொத்தம் 44 படங்களை இயக்கியுள்ளார். அவரது கலைச் சேவையை பாராட்டி 2004 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது. அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

