சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சியினருக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
ஆளுநரின் தொடர் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகளின் காரணமாக இந்த நிகழ்வை விசிக புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.அறிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுவதால், அவரது தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதேபோல ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவும் தெரிவித்துள்ளார்.

