நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு

இசை இந்தியா சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பெண்கள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரைப்படம் ஜனநாயகன் . நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 2026 பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கபப்ட்ட ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டது. இதனால் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றை அனுகிய போதிலும் சென்சார் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கலை படக்குழுவால் தீர்க்க முடியவில்லை.
இந்த நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு CBFC சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன் படி ஜனநாயகன் திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு திரைப்படத்திற்கான ‘A’ சான்றிதழ் என்பது, அத்திரைப்படம் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பார்ப்பதற்கு உகந்தது என்பதை குறிக்கிறது. பொதுவாக கடுமையான வன்முறை, ஆபாசமான மொழி அல்லது முதிர்ச்சியான கருப்பொருள்கள் போன்ற கூறுகள் உள்ள திரைப்படங்களுக்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்படுகின்றன. ‘A’ சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை 18 வயதிற்கு உட்பட்டவர்கள் திரையரங்குகளில் பார்க்க சட்டப்படி அனுமதிக்கப்படுவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *