காசா சென்ற நிவாரண கப்பல்கள் சிறைபிடிப்பு .

அரசியல் ஆளுமை/விருது இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் போர்

கசாவிற்கு உலக மக்களிடைந்து உதவிகளை கொண்டு செல்ல முயன்ற சுமார் 40க்கும் மேற்பட்ட கப்பல்களை இடைமறித்து சிறைபிடித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். பசியால் வாடும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக உணவு, மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு Global Sumud Flotilla (உலக மனிதநேய கப்பற்படை) என்ற அமைப்பின் கீழ் நிவாரண கப்பல்கள் காசாவை நோக்கி சென்று உதவி வருகின்றன கப்பலில் இருந்த சமூக ஆர்வலர்கள் கிரேடா துன்பர்க், ரீமா ஹாசன், தியகோ அவிளா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேலிய அரசால் தாங்கள் கடத்தப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இஸ்ரேல் கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *