தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியானது; முதல் நாளிலேயே 75 கோடிக்கு மேல் வசூல்

அரசியல் இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம், பொங்கலை முன்னிட்டு  ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படம் அன்று வெளியாகவில்லை. இதனிடையே, தமிழ்நாடு சட்டமன்மன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். சமீபத்தில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘A’ சான்றிதல் வழங்கப்பட்ட சூழலில் நேற்று படம் உலகளவில் வெளியானது. இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.78 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *