வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட், பெங்களூருவில் ஆகஸ்ட் 15 முதல் உணவு விநியோக சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நகரம் முழுவதும் உள்ள உணவகங்களை தனது தளத்தில் இணைக்கும் பணிகளை நிறுவனம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உணவகங்களை ஈர்க்கும் வகையில், Zomato மற்றும் Swiggy போன்ற தளங்கள் வசூலிக்கும் 16 முதல் 30 சதவீத கமிஷனுக்கு பதிலாக சுமார் 10 சதவீத கமிஷனை ஃபிளிப்கார்ட் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஃபிளிப்கார்ட் தனது உணவு விநியோக சேவையை அரசின் ஆதரவுடன் செயல்படும் ONDC திறந்த டிஜிட்டல் வர்த்தக வலையமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ராபிடோவின் Ownly சேவையும் பெங்களூருவில் வேகமாக வளர்ந்து வருகிறது. குறைந்த கமிஷன் மற்றும் மாற்று வணிக முறை மூலம் புதிய நிறுவனங்கள் களமிறங்குவதால், Zomato மற்றும் Swiggy ஆதிக்கம் செலுத்தும் இந்திய உணவு விநியோக சந்தையில் போட்டி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

