தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் தேதியை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
இந்த நிலையில், தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தென் மாவட்டங்களை குறிவைத்து வியூகம் வகுத்து வரும் நிலையில், தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

